வெள்ளி, 11 ஜூலை, 2014

தமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும்.


“ஈழச் சிக்கலில் ஐ.நா.மன்றம் தோல்வி கண்டதா, வெற்றி கண்டதா” என்று பேசத் தொடங்கும் முன் பாரதியார் பாடல் ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
பாஞ்சாலி சபதத்தில் தருமன் நாட்டைப் பணையம் வைத்து சூதாடித் தோற்றுவிடுகிறான். நாட்டைப் பணையம் வைத்ததால் தருமன் மீது பாரதியார் ஆத்திரம் கொண்டு சாடுகிறார்.

“ஆயிரங்களான - நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் - சிச்சீ
சிறியர் செய்கை செய்தான் “
என்று சீறிவிட்டு ஒரு பொதுக் கருத்தைப்பதிவு செய்கிறார்.
“காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்
காட்டினார் களேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்யவில்லை.
ஓரஞ் செய்திடாமே - தருமத்து
உறுதி கொன்றிடாமே
சோரஞ் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரையாளும் முறைமை - உலகில்
ஒர்புறத்தும் இல்லை
சாரமற்ற வார்த்தை - மேலே
சரிதை சொல்லு கின்றோம்”.

அன்றிலிருந்து இன்று வரை உலக நிலைமை இதுதான். ஈழச்சிக்கலில் ஐ.நா.மன்றம் தோற்றதா வென்றதா என்பதை எனது பேச்சின் ஊடாக நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
இரண்டாம் உலகப்போரில் செர்மனி- இத்தாலி - சப்பானுக்கெதிராக அணிசேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ், ரசிய நாடுகள் ஐ.நா.மன்றம் அமைப்பது குறித்து 1942, 1943,1944 ஆண்டுகளில் தொடர்ந்து பேசி வரைவுகளை உருவாக்கின.

1944 பிப்ரவரியில் டம்பர்டன் ஓக்ஸ் மாநாட்டில் ஐ.நா.மன்றத்திற்கான விதிமுறைகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 1945 அக்டோபர் 24-இல் முறைப்படி ஐ.நா.மன்றம் அமைப்பது என்று முடிவானது. ஆனால் அந்த நாளுக்கு 79 நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்கா 1945 ஆகஸ்ட் 6-ஆம் நாள் சப்பானின் ஹிரோசிமாவிலும் ஆகஸ்ட் 9-ஆம் நாள் நாகசாகியிலும் தலா ஓர் அணுகுண்டை வீசி இலட்சக் கணக்கான மக்களை அழித்தது.

பிறக்கும்போதே அமெரிக்காவின் அணுகுண்டுப் பயங்கரவாதத்தால் ஊனப்பட்டுத்தான் பிறந்தது ஐக்கிய நாடுகள் மன்றம். அதன்பிறகு, எத்தனையோ நிகழ்வுகளில், எண்ணிலடங்கா மக்கள் - நாடுகளின் ஆக்கிரமிப்பிலும், இனப் படுகொலைகளிலும் மாண்டார்கள்.

1994-இல் ருவாண்டாவில் ஹுட்டு இனத்திற்கும் டுட்சி இனத்திற்கும் இடையே நடந்த மோதலில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 1998 முதல் 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் ஐம்பது லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா 2003-ல் ஈராக்கை ஆக்கிரமித்தது. பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். குடியரசுத்தலைவர் சதாம் உசேனைத் தூக்கிலிட்டுக் கொன்றது அமெரிக்கா. கடைசியில் ஈராக் சென்ற அமெரிக்க வல்லுநர் குழு, தடைசெய்யப்பட்ட ஆயுதம் எதையும் ஈராக்கில் பார்க்கவில்லை என்று அறிக்கை கொடுத்தது.

ஆப்கானிஸ்தான் மண்ணையும் மக்களையும் அமெரிக்கப் படைகள் கடித்துக் குதறி சின்னா பின்னப்படுத்துகின்றன. மடிந்த மக்கள் ஏராளம் , ஏராளம்!

ஐ.நா. மன்றம் அமெரிக்காவுக்கு எடுபிடி வேலைதான் செய்து வருகிறது. நம் கண்முன்னே, நம் இனமக்களை ஈழத்தில் இலட்சக்கணக்கில் சிங்கள வெறி அரசு கொன்று குவித்தது. இந்தியா, சீனா- பாகிஸ்தான் மூன்று நாடுகளும் இலங்கைக்குப் போர்த்தளவாடங்கள் கொடுத்தன. நிதியை வாரி வழங்கின. இந்தியாவும்- பாகிஸ்தானும், இந்தியாவும்- சீனாவும் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டுள்ளன.
ஆனால் இம் மூன்று நாடுகளும் ஈழத்தில் தமிழர்களை அழிப்பதில் ஒரு முகப்பட்டு செயல்படுகின்றன. சாட்சிகள் இல்லாத போர் அது. செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டது. ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் வெளியேற்றப்பட்டன. போரைத் தடுக்க முடிய வில்லை ஐ.நா.வால். போர் நடக்கும் இடங்களில் உலகெங்கும் செஞ்சிலுவைச் சங்கமும் ஐ.நா.மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டுள்ளனவே, அப்படி புதுக்குடியிருப்பிலும், முள்ளி வாய்க்காலிலும் இந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் ராசபட்சே தடுத்தார். அந்தத் தடையை ஏன் ஐ.நா.வால் மீற முடியவில்லை.
போர் முடிந்தபிறகு, அந்தப் போரில் இருதரப்பு மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க இலங்கை அரசு ஒரு குழு அமைக்கவேண்டும் என்று சுவிட்சர்லாந்து நாடு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அது உப்புச் சப்பற்ற தீர்மானம். அதைக்கூட தோற்கடித்தன இந்தியா, சீனா, கியுபா போன்ற நாடுகள். உல அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.மன்றம் அரசுகளின் பயங்கரவாதத்திற்கும் மனித குல அழிப்புக்கும் துணையாகவே நிற்கிறது.

மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் சொல்லொணாச் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். சிங்களப் படையாட்கள், முகாம்களுக்குள் உள்ள தமிழர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். நோய்க்கு மருந்தின்றி ஆயிரக்கணக்கில் சாகின்றனர்.1000 பேருக்கு ஒரு கழிப்பறை. அது பின்னர் 800 பேருக்கு ஒரு கழிப்பறை என்று மாற்றப்பட்டதாம். 800 பேருக்கு ஒரு கழிப்பறை என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

குடிக்கத் தண்ணீரில்லை. குளிப்பதற்கு பலநாட்கள் காத்திருக்க வேண்டும். இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். இளம் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். நோயாளிகள் மருந்தின்றி மடி கிறார்கள். இட்லரின் வதைமுகாம்கள் போல் உள்ளன இராசபட்சேயின் வன்னிமுகாம்கள். செர்மனி சென்றி ருந்தபோது மியூனிச் அருகே டாக்காவ் என்ற இடத்தில் காட்சியகமாக வைக்கப்பட்டுள்ள இட்லரின் வதை முகாம் (Concentration Camps) ஒன்றை ஐயா நெடுமாறன் அவர்களும் நானும் பார்த்தோம். அதைவிடக் கொடிய முகாமாக வன்னி முகாம்கள் இருக்கின்றன.
இவற்றைப் பார்வையிட்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்.கி.மூன். இந்த முகாமகள் நன்கு பராமரிக்கப் படுவதாகக் கொழும்பில் கூறினார். பான்.கி.மூ.னின் பொய்யுரையைக் கண்டித்து இலண்டனிலிருந்து வரும் டைம்ஸ் ஏடு ஆசிரியவுரை தீட்டியது.

ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர்களிலேயே மிகவும் மோசமானவர் பான் கி.மூன். இவருக்கு முன்னாலிருந்த கோஃபி அன்னான், இலங்கை அரசின் இனப் படுகொலைப்போரைக் கண்டித்து அவ்வப்போது அறிக்கையாவது வெளியிட்டார். ஆனால் பான்.கி.மூன் கொலைகாரன் இராசபட்சேவுக்கு நற்சான்று அளித்தார்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பல போராட்டங்கள் நடத்தினோம். போரை நிறுத்த முடியவில்லை. இப்பொழுதும் நாம் போராடுகிறோம். வன்னி வதை முகாம்களிலிருந்து தமிழர்களை விடுதலை செய்ய முடியவில்லை. காரணம் என்ன?
நமக்கொரு நாடில்லை. உலகநாடுகளோடு உறவுகொள்ள, ஐ.நா. மன்றத்தில் பேச, தமிழ் இனத்திற்கென்று ஒரு நாடில்லை. பத்துக் கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் வாழ்கிறோம். நமக்கொரு நாடில்லை. ஆனால் ஒன்றரைக் கோடி சிங்களர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது. ஆறரைக் கோடிப்போர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம். தமிழ்நாடு நமது தாயகம். தமிழ்நாட்டைத் தன்னுடைய காலனியாகத்தான் டெல்லி வைத்திருக்கிறதே தவிர உரிமையுள்ள மக்களாக நம்மை நடத்தவில்லை.

1947-க்கு முன்னால் இலண்டனுக்குக் காலனியாகத் தமிழ்நாடு இருந்தது. அதற்குப்பிறகு டெல்லிக்குக் காலனியாக இருக்கிறது. தமிழினம் உலக அனாதை இனமாக உள்ளது. கடந்த சனவரி மாதம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது கொத்துக்குண்டு வீசி பாலஸ்தீன மக்களைக்கொன்றது. பொதுமக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தி குவியல் இருக்கின்றன. அந்த நாடுகள் சில முன்முயற்சி எடுத்து ஐ.நா. பொது அவையில் போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மானத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்த்தன. ஆனால் 142 நாடுகளின் வாக்குகளைப் பெற்று போர் நிறுத்தத் தீர்மானம் வெற்றிப்பெற்றது. இஸ்ரேல் நாடு போரை நிறுத்தவேண்டும் என்ற தீர்மானத் திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டுமானால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறிவந்த இந்தியாவும் மற்ற நாடுகளும் ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கோரவில்லை. கேட்க நாதியற்ற இனம் தமிழ் இனம்.

அதனால்தான் ஈழத்தில் பேரழிவு நடந்தது. தமிழக மீனவர்களை சிங்களப்படை சுட்டுக்கொல்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறிக்கின்றன. இங்கும் சரி, ஈழத்திலும் சரி, யார் தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல் படுகிறார்களோ அவர்களை இந்தியா ஆதரிக்கிறது. ஊக்கப்படுத்துகிறது. நம் மீனவர்கள் வருகிறார்கள் என்று சிங்களப்படைக்குத் துப்புச் சொல்லிவிட்டு இந்தியக் கடலோர காவல்படை ஒதுங்கிக் கொள்கிறது.

இதையெல்லாம் ஐ.நா. தட்டிக்கேட்காது. தமிழ் இனத்திற் கென்று ஒரு நாடல்ல, இரு நாடு வேண்டும். அங்கேயும் தனி நாடு வேண்டும். இங்கேயும் தனி நாடு வேண்டும்.
இந்த ஐ.நா.மன்றம் போய் இன்னொரு ஐ.நா.மன்றம் வந்தாலும் தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பில்லை. தமிழ் இனத்திற்கென்று நாடு அமையும் போது தான் நமக்கான பாதுகாப்பு கிடைக்கும்.
============================================
http://www.kannotam.com/
-----------------------------------------------------------------------

திங்கள், 21 ஏப்ரல், 2014

“இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில் தமிழினத்திற்கு ஒரு போதும் நீதிகிடைக்காது!”


“ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமப்பிரதிநிதித்துவம் அளித்தால் கூட, இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில் தமிழினத்திற்கு ஒரு போதும் நீதி கிடைக்காது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

தோழர் பெ.மணியரசன்,

தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் தொலைநோக்கு பார்வையுடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தமிழர் முன்னணி அமைப்பின் பொறுப்பாளருக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற மாநாடுகள், நமக்குள் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளவும், விவாதங்கள் நடத்தவும், பல்வேறு கருத்துகள் குறித்து சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இந்தியாவின் நாடாளுமன்ற மக்களவையில் தேசிய இனங்கள் அனைத்திற்கும் சம அளவில் பிரதிநிதித்துவம் கோரி இந்த மாநாடு நடைபெறுகின்றது. தமிழ்த் தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு, இது போன்ற கோரிக்கைகள் படிக்கட்டுகளாக அமையும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கருதி இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், இது போன்ற கோரிக்கைகள் ஏன் நம்மிடம் வருகின்றன என நாம் சிந்திக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கென உள்ளவர்கள் 39 பேர். 545-ஐ வைத்துக் கொண்டு பார்த்தால், இது மிக மிகச் சிறுபான்மை. பூதக்கண்ணாடி சிறுபான்மை! இந்த சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு, தமிழ் இனத்திற்கு வேண்டிய உரிமைகளை நம்மால் பெற முடியவில்லை. எனவே, நம்மிடம் இது போன்ற கோரிக்கைகள் அவலக்குரல்களாக எழுகின்றன.

இந்தியைத் தாய்மொழி இல்லாமல் இருந்தும் கூட, இந்தியை பொது மொழியாக, ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் இந்தியாவின் 10 மாநிலங்களில் இருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 225 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இது போதாதென்று, ஆரியத்துடன் சமரசம் செய்து கொண்டு, சமற்கிருத மொழி மேலாண்மையை ஏற்றுக் கொண்டு வாழும் தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரினால், இவர்கள் அனைவரும் அதை ஆதரிப்பர்.

இந்தி பேசும் மக்களின் உண்மையான தாய்மொழியான போஜ்புரி, அவந்தி, கல்யாணி போன்ற மொழிகளை அவர்கள் வளர்க்க வேண்டுமென விரும்பினாலும், அதைவிட இந்தி ஒரு பொது மொழியாக இருக்கட்டுமே என்பதற்கு அவர்கள் தயக்கமின்றி ஆதரவளிக்கின்றனர்.

எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமபிரதிநிதித்துவம் என்று வைத்தால் கூட, இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் அதில் இடம்பிடிப்பர். ஒரு மாநிலத்திற்கு 10 பேர் பிரிதிநிதி என்றால், இந்தி பேசுகின்ற 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 100 பேர் அதில் இடம் பிடித்துவிடுவர். எனவே, நாம் மீண்டும் சிறுபான்மை ஆகிவிடுவோம். இப்பொழுது மட்டுமல்ல, சமபிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டால் கூட, இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில், தமிழினத்திற்கு ஒரு போதும் நீதி கிடைக்காது.

7 கோடியே 21 இலட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டு, இந்தியாவில் சிறுபான்மை என்கிறார்கள். நாம் ஏன் சிறுபான்மையாகிப் போனோம்? பிரான்சு நாட்டின் மக்கள் தொகை 6 கோடி. ஐரோப்பாவில் யாரும் பிரான்சை சிறுபான்மை எனச் சொல்லவில்லை. பிரிட்டனின் மக்கள் தொகை 6 கோடி. உலக அரங்கில் யாரும் பிரிட்டனை சிறுபான்மை எனச் சொல்லவில்லை. இத்தாலி நாட்டில் 6 கோடி பேர் இருக்கின்றனர். அவர்களை யாரும் சிறுபான்மை எனச் சொல்லவில்லை. இலங்கையில், தமிழர்களையும் சேர்த்தால் கூட வெறும் 2 கோடி பேர் தான் இருக்கின்றனர். இலங்கையை யாரும் சிறுபான்மை நாடு என சொல்லவில்லை.

ஆனால், இவர்களையெல்லாம் விட அதிகமாக, 7 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டை ஏன் இவர்கள் சிறுபான்மை எனச் சொல்கிறார்கள்?

உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு கோடிக்குக் கீழான மக்கள் வசிக்கின்றனர். தமிழீழ சிக்கலில் சமரசப் பேச்சு நடத்த வந்த நார்வே நாட்டில், வெறும் 47 இலட்சம் பேர்தான் இருக்கின்றனர். மத்தியக் கிழக்கில், கண்களில் விரலை விட்டு ஆட்டிப் படைக்கிறானே இசுரேல் நாடு, அங்கு 77 இலட்சம் பேர்தான் வசிக்கின்றனர்.

ஆனால், 7 கோடிக்கும் அதிகமானவர்களைக் கொண்ட நாம் ஏன் சிறுபான்மையாகிப் போனோம்? நமக்கு ஏன் இந்த நிலை? இதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம், நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பல தேசிய இனங்களை நம்மோடு இணைத்து வைத்தது. எதற்கு? சேர்த்துவைத்து சுரண்டுவதற்காக. எல்லா கழுதையும் ஒன்றாகக் கிட என ஏகாதிபத்திய வெறியாக அச்செயல் நடைபெற்றது! இதன் காரணமாகவே நாம் சிறுபான்மையானோம்.

உதாரணமாக, நம் வீட்டுல 7 பேர் இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். நம் பிள்ளையின் படிப்பை நாம் தீர்மானிக்க - நாம் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த 7 பேரில் எது பெரும்பான்மையோ அதை வைத்து தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர் வீட்டில் இருக்கும் 100 பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டு பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால், அது எப்படி வேடிக்கையானதாக இருக்குமோ, அதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலையாக இருக்கிறது.

நம்முடைய கடையின் வரவு செலவு கணக்கை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம்மோடு சிறிதும் தொடர்பில்லாத வேறு 100 கடைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு, முடிவெடுத்தால் என்னாகும்? அந்தக் கடை திவாலாகும். அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்திக்காரர்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவனுடன் என்னை இணைத்து வைத்து என்னை சிறுபான்மை என்கிறீர்கள்? நமக்கு சம்பந்தமுள்ள தெலுங்கு, மலையாள தேசிய இனங்கள் கூட நம்மை ஆதரிக்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இந்திக்காரர்கள் எப்படி நம் கோரிக்கைகளை ஆதரிப்பார்கள்?

சுரண்டும் நோக்கத்திற்காக தேசிய இனங்களை காலனியாக இணைத்த பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் அந்த வெறிச் செயலை, அப்படியே வைத்துக் கொண்டு தான் இந்தியா பிறந்தது. பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்ததைப் போல், 1947 ஆகத்து 15 அன்றுக்குப் பிறகு இந்தியாவின் காலனியாக தமிழ்நாடு மாறியது. நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. பிரிட்டன் ஏகாதிபத்தியம் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்து, அதையே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எனவே, இந்த இந்தியக் கட்டமைப்பே நமக்குப் பகையானது. பள்ளிகளில் மாணவர்களுக்கு அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தார் என சொல்லிக் கொடுக்கிறார்கள். அலெக்சாண்டர் படையெடுக்கும் போது, இந்தியா என்ற ஒன்றே உருவாகவில்லை. அலெக்சாண்டர் இன்றைக்கு பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள ஏதோவொரு இடத்தின் மீதுதான் படையெடுத்தார். அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் கடை ஏழு வள்ளல்களான பாரி – ஓரி- ஏரி உள்ளிட்டோர் ஆண்டு கொண்டு வந்தனர். மயிலுக்கு ஆடை போர்த்தி, கொடி வளர தேர் கொடுத்து மன்னர்களின் ஆட்சி, மக்களாட்சியாக இங்கு நடந்து கொண்டிருந்தது.

ஆனால், பொய்யாக – புனைவாக இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்தார் என மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதன் மூலம், இந்தியா பழம் பெரும் நாடு – நமது நாட்டின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தார் என மாணவர்கள் மனதில் பொய்யான சிந்தனைகளை விதிக்கிறார்கள். இது போன்ற பொய் – புனைவுகளின் மூலம் நடைபெறும் உளவியல் உருவாக்கத்தால்தான் இந்தியா கட்டமைக்கப்படுகிறது.

இந்த, சேட்டன் பூட்டன் செவ்வாய்கிழமையோடு, தமிழ்நாட்டைக் கட்டிப் போட்டதால்தான் நமக்கு இந்த நிலை! எனவே, இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

1938ஆம் ஆண்டு, இந்திக்கு எதிராக தமிழறிஞர்கள் கூட்டிய மாநாட்டில், தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என முழக்கம் எழுப்ப, தந்தை பெரியார் – நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர் அதை எதிரொலித்தனர். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ‘தி.மு.க.’ என்ற தமது நூலில் இதை பதிவு செய்திருக்கிறார். பெரியார் பங்கேற்புக்குப் பின், அந்த முழக்கம் விரிவடைந்தது. அந்த மாநாட்டிற்குப் பிறகுதான், பெரியார் தனது ஏட்டில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாடு தமிழருக்கே என பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் என எழுதினார்.

1946இல், வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் “விடுதலை“ கொடுக்க பேச்சுகளை நடத்திக் கொண்டிருந்த போது, தந்தை பெரியார் தமிழ்நாட்டு விடுதலை வேண்டி மனு கொடுத்தார். 1947 ஆகத்து 15, தமிழர்களுக்கு விடுதலை நாள் அல்ல என அறிவித்தார். அதை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டுமெனக் கோரினார்.

1948க்குப் பிறகு உருவான தி.மு.க. திராவிட நாடு என்ற பெயரில் கேட்டாலும், தமிழ்நாடு விடுதலையைத்தான் கேட்டார்கள். 1957இல் 15 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க., 1962இல் தமிழ்நாடு விடுதலை கோரிக்கையை வைத்துக் கொண்டு 50 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்தது. இது, தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு இது! இந்தியாவில் விடுதலைக்காக போராடும் வேறு எந்த தேசிய இனமும், இவ்வாறு மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியதில்லை. இந்தியாவை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடைபெறும் இடங்களில், மக்கள் ஆதரவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், சனநாயக முறையில் அதை வெளிப்படுத்திய முதல் இனம், தமிழினம் தான்!

1970களில் சி.பா.ஆதித்தனார் தமிழ்நாட்டுடன் தமிழீழத்தையும் இணைத்துக் கொண்டு, தமிழர் பேரரசு கேட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்நாடு விடுதலை கேட்டார். இன்றைக்கு, நாம் தமிழ்நாடு விடுதலை கோரி நிற்கிறோம்!

இந்த வரலாற்றுத் தொடர்ச்சி எதைக் காட்டுகிறது? இந்தியாவுடன் சேர்ந்திருக்க எமக்கு விருப்பமில்லை என தமிழ் இனம் தொடர்ந்து உணர்த்தி வந்துள்ளதன் வரலாற்று வெளிப்பாடு இது! நம் முன்னோர்கள் இதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இன்றைக்கு தமிழ்நாடு விடுதலை கோரி இயங்குகிறோம்.

இன்று, நான் உட்பட இந்த மேடையில் அமர்ந்துள்ள பலரும் பொதுவுடைமை இயக்கங்களிலிருந்து வந்தவர்கள். நான் சி.பி.எம். கட்சியில் 15 ஆண்டுகள் முழுநேர ஊழியராகப் பணியாற்றியவன். தோழர் சிதம்பரநாதன், தோழர் தியாகு என இங்குள்ளவர்களில் பலரும் அவ்வாறு பொதுவுடைமை இயக்கங்களிலிருந்து வந்தவர்கள் தான்.

கம்யூனிசத் தத்துவம் என்பது காலந்தோறும் வளரக்கூடிய அறிவியல் பூர்வமான தத்துவம். அதற்கான ஆற்றல் – potential அதற்கு இருக்கிறது. இத்தத்துவத்தை வைத்துக் கொண்டு இங்கு பலர் நாடாளுமன்றப் பாதைக்குச் சென்று சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாலேயே, அந்தத் தத்துவம் தவறென கருதி விட முடியாது.

தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டெனச் சொல்லி, அதை எந்த சூழல்களில் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறுகிறது மார்க்சியம். எந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது என்றும் அது சொல்கிறது. அது தான் சிக்கல்! மார்க்ஸ் என்ன சொன்னார் - இலெனின் என்ன சொன்னார் என புத்தகங்களைப் புரட்டிப் பார்க்காமல். அவர்கள், எதை சிந்திக்காமல் விட்டார்களோ, சொல்லாமல் விட்டார்களோ அதை உணர்ந்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் சொல்லாததையும் சிந்திக்க வேண்டும்.

தேசிய இனப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியே! அதை வெறும் முதலாளியத்தின் கைவேலைப்பாடாக மட்டும் கருதக்கூடாது. தோழர் ஸ்டாலின் கூறுவதைப் போல, முதலாளியச் சந்தையில் பிறந்ததல்ல தேசிய இனப் போராட்டங்கள்! அது இரண்டாம் பட்சக் கோரிக்கையும் அல்ல என்பதே வரலாறு!

ஏழு சமஸ்தானங்களில் இருந்த மன்னர்களின் ஆட்சிக்கெதிராக நடந்த பிரஞ்சு புரட்சி, சனநாயகத்திற்கான தேசியப் புரட்சியாக மட்டும் நடக்கவில்லை. அது பிரஞ்சு தேசிய இனத்தின் புரட்சியாகவே நடந்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உருவாக்கத்தின் போது, தேசிய இனம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. பிரிட்டனுக்குக் கீழே குடியேற்ற காலனி நாடாக அமெரிக்கா இருந்த போது, அமெரிக்காவிற்கான சட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இயற்றக் கூடாதென எதிர்ப்புகள் எழுந்தன. 1876இல், அமெரிக்கா விடுதலை அடைந்தது. அதன்போது நடைபெற்ற விவாதங்கள், Federalist papers என்ற பெயரில் வெளியாகியுள்ளன. அவர்கள் தேச அரசு உருவாக்கம் குறித்த ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தினர்.

1905ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நார்வே பிரிந்த போது, நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதை தோழர் லெனின் ஆதரித்தார்.

பிரிட்டனிலிருந்து பிரிந்து போக, அயர்லாந்து போராடிய போது மார்க்ஸ் முதலில் அதை எதிர்த்தார். பிரிட்டன் பாட்டாளிகளோடு இணைந்து அயர்லாந்து பாட்டாளி வர்க்கம் போராட வேண்டுமென நினைத்தார். ஆனால், பின்னர் தனது நிலைபாட்டை அவர் மாற்றிக் கொண்டார்.

தோழர் லெனின், 1869இல் மார்க்ஸ் கூறிய மேற்கோளை ஒன்றை எடுத்துக்காட்டி பேசினார். அயர்லாந்து விடுதலைக்குப் பிறகு வேண்டுமானால், பிரிட்டனுடன் அயர்லாந்து கூட்டாட்சியின் கீழ் இணைந்து கொள்ளலாம் என மார்க்ஸ் கூறியதே அது. ஏன் இவ்வாறு கூறினார்? ஏனென்றால், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கருத்துநிலை அவர்களது மனவிருப்பில் இருந்தது.

தோழர் லெனின், புரட்சிக்கு முன் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படும் என்பதை அறிவித்தால்தான் அவர்கள் வருவார்கள் எனக் கருதினார். தேசிய முதலாளிகள் அதை பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும் அவர் கருதினார்.

வர்க்கப்புரட்சி எங்கு நடக்கும்? அறிவியலில், Time and Space என்பார்களே, காலமும் இடமும் அது என்ன? காலமும் இடமும்தான் முதற்பொருள் என்றார் தொல்காப்பியர். ஒரு தேசிய இனத்தில்தான் வர்க்கப்புரட்சி நடக்கும்! இரசியாவில் நடைபெற்றது இரசியப்புரட்சிதானே தவிர சோவியத் புரட்சியல்ல. 96 விழுக்காடு ஹன் தேசிய இனத்தவர்கள் வசிக்கும் சீனாவில், ஹன் தேசிய இனத்தில்தான் சீனப்புரட்சி நடைபெற்றது. கியூபாவில் அப்படிதான் நடைபெற்றது. வியட்நாமில் அது தான் நடைபெற்றது. எனவே, வர்க்கப்புரட்சியின் அடிப்படை இலகு (Basic Unit) என்பது தேசிய இனப்புரட்சி தான்.

கனடாவிலிருந்து பிரஞ்சு மொழி பேசும் மக்களான க்யூபெக் மக்கள் தனிநாடு கோருகின்றனர். அங்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடைபெற்று, அது 1 விழுக்காட்டில் தோல்வியடைந்தது. அங்கு மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரிட்டனிலிருந்து அயர்லாந்தின் ஒரு பகுதி பிரிந்துவிட்டது. தற்போது, இந்த ஆண்டு ஸ்காட்லாந்து பிரிந்து போக கருத்து வாக்கெடுப்பு நடக்க உள்ளது. முதலாளியம் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் இந்த நிலை என்றால், சோவியத் யூனியனுக்கு எந்த கதி நேர்ந்தது?

எனவே, தேசிய இனக் கோரிக்கைகள் எப்பொழுதும் இரண்டாம் பட்சக் கோரிக்கைகளாக இருப்பதில்லை. கூட்டாட்சி தத்துவங்கள் முதலாளியக் கட்டமைப்பிலும், சோசலிசக் கட்டமைப்பிலும் தோல்வி கண்டுவிட்டன என்பதுதான் உலக நிலைமை! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே பல பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இன்னமும் தேசிய இனங்களாக வளர்ச்சி பெறவில்லை. அவர்களை சுயாட்சி உரிமை கொண்ட பிரதேசங்களாக நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், வளர்ச்சியடைந்த தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்வது எந்தவகையிலும் சரியானதன்று. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அரசுரிமை வேண்டும். அவர்களுக்கென தேச அரசு வேண்டும். அதுதான் உலக நிலைமையாகவும் இருக்கிறது!

நமக்கு, தமிழ்த் தேச அரசு வேண்டும். எந்த நிலையிலும் நம்மால் இந்தியாவோடு இணைந்திருக்க முடியாது. இணைந்திருக்கக் கூடாது. இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் வர்க்கப் புரட்சியில் ஈடுபடுங்கள், யார் வேண்டாம் என்றது? ஆனால், எங்கோ உள்ளவனையும் இணைத்துக் கொண்டுதான் அனைத்திந்தியப் புரட்சி நடத்த வேண்டுமெனச் சொல்லி இங்கு மடைமாற்றம் செய்யாதீர்கள்! வடநாட்டில் வர்க்கப்புரட்சி நடைந்தால், அதை நாம் ஆதரித்து விட்டுப்போவோம். ஆனால், அவர்களையும் இணைத்துக் கொண்டுதான் புரட்சி எனச் சொல்லி இங்கு மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை. நம் வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும். எங்கோ இருப்பவன் எழுதக்கூடாது.

தோழர் பிடல் காஸ்த்ரோ கூறியதைப் போல், புரட்சியாளர்கள் தம்முடைய இலட்சியத்தை நமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் புரியும் வகையில் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதுபோல, நாம் தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும். இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் அது தெரிய வேண்டும். நமது தோழமை சக்திகளுக்கும் அது தெரிய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட போது, பாவல்ரேறு பெருஞ்சித்திரனார் புலிகளை ஆதரிப்பதால் தம்மை கைது செய்வோர் செய்க – தன் தலை கொய்ய நினைப்போர் கொய்க என எழுதினார். அதுபோல, தமிழ்த் தேச விடுதலை இலட்சியத்தை எவ்வித தயக்கமும் அச்சமும் இன்றி நாம் வெளிப்படுத்த வேண்டும்! அது தான் தமிழினம் தலைநிமிர ஒரே வழி!“

================================================================


“எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது இலக்கு இறையாண்மையுள்ள 
தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவது! 
இதுவே தமிழ்த் தேசியம்!”

========================================================================

http://youtu.be/4FQ9uiGP_3s
-------------------------------------------------------------------

தலைவர் பெ.மணியரசன்.

புதன், 2 ஏப்ரல், 2014

தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும்-தோழர் பெ.மணியரசன்

ஆகாதவனை அழிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் “ அனுகூலச் சத்துரு” உத்தியும் ஒன்று என்று ஆரியநூல்கள் கூறுகின்றன, அவற்றுள் இன்னொரு உத்தி திருதராட்டிர ஆலிங்கனம்.

நண்பனைப் போல் உறவு கொண்டு, உதவுவது போல் நடித்து, நண்பன் ஏமாந்த வேளையில் அவன் கழுத்தை அறுப்பது அல்லது அவனை ஆபத்தில் மாட்டி விடுவது. இது அனுகூலச் சத்துரு உத்தி. திருதராட்டிர ஆலிங்கனம் என்பது, அன்பு பாராட்டுவது போல் ஒருவரை ஆரத்தழுவி, அப்படியே எலும்பு நொறுங்குகிட இறுக்கி அணைத்துக் கொன்றுவிடுவது!

ஈழத்தமிழர் இனப்படுகொலை மீது நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுத் தரப்பினரைத் தண்டிப்பது தொடர்பான சிக்கல்களில் அமெரிக்காவும் இந்தியாவும் கடைபிடிக்கும் உத்திகள் மேற்கண்ட ஆரிய சூழ்ச்சித்திட்டங்களை ஒத்தவை!

ஜெனிவாவில் 27.03.2014 அன்று ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்து 23 நாடுகள் ஆதரித்து நிறைவேற்றப்பட்ட – ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் அனுகூலச் சத்துரு உத்தி சார்ந்தது என்பது தெளிவாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறது என்று இவ்வாண்டும் உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டது. அதன் தமிழகப் பிரச்சார பீரங்கியாக வழக்கம் போல் இவ்வாண்டும் கலைஞர் கருணாநிதி செயல்பட்டார் . அவர் 01.02.2014 அன்று டெசோ கூட்டம் நடத்தி, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார். அப்பொழுது அமெரிக்கத் தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று வெளியாக வில்லை. அதில் என்ன இருக்கிறது என்பதைக் கருணாநிதியும் வெளிப்படுத்த வில்லை.

இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்ற வினா பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது . கடைசியில் வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது. நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இராசபட்சே கடுமையாகக் கண்டிக்கிறார்.

அமெரிக்கத் தீர்மானத்தில் அடங்கியுள்ள சரக்குகளை எடை போட்டுப் பார்த்தால் அமெரிக்கா-இந்தியா-இலங்கை மூன்று நாடுகளும் திரைக்குப் பின்னால் கூட்டாகப் பேசித் திரைக்குப் பின்னால் ஒத்திகையும் நடத்திவிட்டு-பார்வையாளர்கள் முன்னே அரங்கத்தில் எதிரும் புதிருமானவர்களாக நின்று வசனம் பேசி நாடகம் நடத்தியிருப்பது அம்பலமாகி விட்டது.

கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை விடப் புரட்சிகரமான தீர்மானம் இந்த ஆண்டு வந்துள்ளது. தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுமனறம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும், தமிழ்நாட்டுத் தமிழர்களில் ஒரு சாராரும் டமாரம் அடித்துத் திரிந்தனர். “சுதந்திரமான சர்வதேச விசாரணையை அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது” என்று டெசோ கருணாநிதியும் குந்திக் குரலடுத்துக் கூவிக் கொண்டிருந்தார்.

ஆனால் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் அந்தக் கற்பனைக்கெல்லாம் ஆப்பு வைத்து விட்டது. ஐ.நா.மனித உரிமை ஆணையர் விசாரிக்கலாம் என்ற அளவில் பன்னாட்டுப் புலனாய்வை வெட்டிக் குறுக்கி விட்டது இத்தீர்மானம். ஐ.நா.மனித உரிமை ஆணையரும் தன் விருப்பப்படி தற்சார்புடன – சுதந்திரமாக இலங்கைக்குப் போய் விசாரிக்க முடியாது. இராசபட்சே அரசு அனுமதித்தால் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையரும் விசாரிக்க முடியும் என்கிறது தீர்மானத்தின் பிரிவு 11.

“மேலே கூறப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த, இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று ஐ.நா.மனித உரிமை ஆணையரும் மற்றும் தொடர்புடையவர்களும் இலங்கை அரசுக்கு அறிவுரையும் தொழில் நுட்ப உதவிகளும் செய்யலாம்” (பிரிவு 11) .

இலங்கை அரசு என்பது சாரத்தில் யாரைக் குறிக்கிறது? இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சேயைக் குறிக்கிறது. இராசபட்சே அனுமதித்தால் மனித உரிமை ஆணையர் அறிவுரை வழங்கலாம். கவனிக்க வேண்டும், அது கூடக் குற்றப் புலனாய்வு (INVESTIGATION) செய்வதற்கல்ல, அறிவுரை (ADVICE) கூறுவதற்கு! சுதந்திரமான அதிகாரம் படைத்த பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட குழு குற்றப் புலனாய்வு செய்வது என்ற கோரிக்கையை குழிதோண்டிப் புதைத்து விட்டது அமெரிக்கத் தீர்மானம்!

அமெரிக்கத் தீர்மானம் இனப்படுகொலை பற்றிய புலனாய்வு என்று கூறாவிட்டாலும் போர்க்குற்றம் என்று கூறுகிறது எனப் பூரித்துப் போனார்கள் தமிழக இன உணர்வாளர்கள் சிலர். போர்க்குற்றத்திற்குள் இனப்படுகொலைக் குற்றமும் இடம் பெறும் என்று விரித்துரைத்தனர் விளக்கவுரை விற்பன்னர்கள். ஆனால் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் போர்க்குற்றம் என்று கூடக் கூறவில்லை . அத்தீர்மானத்தின் 10-வது பிரிவில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“ தொடர்ந்து கொண்டுள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க நம்பகமான உள்நாட்டு செயல் முறைகள் இல்லாததால் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு தேவை என்று மனித உரிமை ஆணையர் அலுவலகம் பரிந்துரைத்தது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்வரும் முடிவுகள் முன்வைக்கப் படுகின்றன”.

10(a) இலங்கை அரசு இத்திசையில் செயல்படுவதில் ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பிடவும், அங்கு மனித உரிமைகள் பற்றிக் கண்காணிக்கவும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும்.

10(b) “இலங்கையில் இருதரப்பினரும் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அதிகார அத்து மீறல்களையும் அவை தொடர்பான குற்றங்களையும் விரிவாகப் புலனாய்வு செய்யவும், அரங்கேற்றப் பட்ட குற்றங்களை மெய்ப்பித்து நிலைநாட்டவும் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதைத் தவிர்க்கவும், அவர்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்யவும் தொடர்புடைய வல்லுநர்களின் உதவியைப் பெறவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10(c) என்ன நடந்துள்ளது என்பதை மனித உரிமை மன்றத்தில் 27-வது கூட்டத்தில் (2014 செப்டம்பர் வாக்கில்) வாய் மொழியாகக் கூற வேண்டும்.

மனித உரிமை மன்றத்தின் 28-வது கூட்டத்தில் (2015 மார்ச்) முழுமையான விவாதத்திற்குரிய விரிவான அறிக்கையை மனித உரிமை ஆணையம் அளிக்க வேண்டும்”.

மேற்கண்ட தீர்மானத்தின் செயல்பாட்டு பகுதியில் (Operative Portion) எங்கேயும் போர்க்குற்றம் என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை. அது மட்டு மல்ல, இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சமதட்டில் வைத்து இரு தரப்பும் (Both Parties) செய்த மனித உரிமை மீறல் குற்றங்களை, அதிகார அத்து மீறல்களை விசாரிக்க வேண்டும் என்கிறது.

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள படைப் பிரிவுகளைத் திரும்ப அழைத்துக் கொள்வது, சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது போன்ற எதுவுமில்லை இத்தீர்மானத்தில் தமிழர் என்ற சொல் கூடக் கிடையாது. இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் என்று மட்டுமே இத்தீர்மானம் கூறுகிறது. இவ்வாறாக, ஈழச் சிக்கல் ஒரு தேசிய இனச் சிக்கல் என்பதை ஏற்கமறுத்து, மதச் சிறுபான்மைச் சிக்கலாக மடைமாற்றி, சிங்கள பேரினவாதத்திற்கு அமெரிக்கத் தீர்மானம் சேவை செய்கிறது.

ஒருவேளை இராசபட்சே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதித்தால் அந்த ஆணையத்தின் பணி என்ன? இலங்கை அரசு விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பும் செய்த குற்றங்கள் மீது இராசாபட்சே அரசு நடத்தும் விசாரணைக்கு உதவியும் அறிவுரையும் வழங்குவது தான் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் பணி!

இத்தீர்மானம் சொத்தையானது ; சோடையானது என்பது அமெரிக்காவுக்குத் தெரியாதா? தெரியும்! திட்ட மிட்டுத்தான் இப்படி ஒரு தில்லுமுல்லு தீர்மானத்தை அது முன்மொழிந்தது. தமிழர்களுக்கு நீதி கேட்பதைப் போன்ற தோற்றத்துடன், தமிழர் சிக்கலைப் பயன்படுத்தி இலங்கை அரசைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இது ஒரு வழி . அவ்வளவே !

தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்ப் படுகொலைகளை மறைக்க ஏற்கெனவே மாட்டிக் கொண்டுள்ள மனித உரிமை முக மூடிக்குப் புதுச்சாயம் பூசிக் கொள்ள அமெரிக்காவுக்குக் கிடைத்த புதிய வாய்ப்பு தான் இத் தீர்மானம்.

இதெல்லாம் இந்திய ஆரிய வர்த்த அரசுக்குத் தெரியாதா? தெரியும்! நாடகம் நம்பும் படியாக இருக்க வேண்டாமா ? அதற்காக- அமெரிக்க - இலங்கை அரசுகளிடம் ஒப்புக் கொண்ட பாத்திரத்தைக் கனகச்சிதமாக நடித்துள்ளது.

இந்தியா ஆதரிக்காதது – அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிர்வகைக் கவர்ச்சி ஆகும். தமிழின உணர்வாளர்களைக் குழப்பிடும் தந்திரம் ஆகும். தமிழினப் படுகொலைப் போரில் பங்கு கொண்ட இந்தியா - தமிழின உணர்வாளர்களின் பகையைத் தேடிக் கொண்டுள்ளது. இந்த மனநிலையில் இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்றது, தமிழின உணர்வாளர்களிடம் இந்திய அரசின் மீதான எதிர்ப்பைத்தான் முதன்மைப் படுத்தும். அமெரிக்கத் தீர்மானத்தின் சூழ்ச்சியின் மீது உரிய அளவு கவனம் பாயாது!

இந்தியா – அமெரிக்கா - பிரிட்டன் – இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் ஈழத்தமிழர் சிக்கல் குறித்த விசாரணை நாடகத்தில் கோயபல்ஸ் வேடம் பூண்டுள்ள கருணாநிதி, எட்டப்பராகவே என்றும் செயல்பட்டுப் பழகிப் போன ப.சிதம்பரம் ஆகியோர் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததற்காகக் கண்ணீர் அணையைத்திறந்து விட்டுள்ளார்கள். ஒப்பாரி வைக்கும் போது கூட தமது கங்காணி வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார் கருணாநிதி! இந்தியா தமிழர்களின் தாயகமாம் ; இந்தியா ஆதரித்து வாக்களிக்காமல் புறக்கணித்தது தமிழர்களுக்குத் தலைகுனிவாம்! இந்திய அரசு எப்போதுமே தமிழர்களின் இனப்பகை அரசு என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம்!

செயலலிதாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது . யாராவது குளத்தை இறைத்துத் தண்ணீரை வெளியேற்றியிருந்தால் மிதக்கும் மீன்களைக் கொத்திச் செல்லப் பருந்தாகப் பறந்து வருவார்!

கொலைகாரக் கொடியவன் இராசபட்சே கூட இத் தீர்மானத்திற்கு எதிராக நெற்றிக் கண்ணைத்திறந்து நெருப்பைக் கொட்டுகிறான்! நாடக மேடைதானே, தீப்பற்றிக் கொள்ளாது.

இந்தியா, தீர்மானத்தை ஆதரிக்காததால், அதற்குப் பரிசாக, இலங்கைச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் திறந்துவிட ஆணையிட்டானாம் இராசபட்சே! அப்படி என்றால், இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் பணயக் கைதிகளாகத்தான் ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு; கைது செய்கிறதா ? எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்பது போலிக் குற்றச் சாட்டு தானே !

ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கான நிரந்தரப் பேராளராக இருந்து ஓய்வு பெற்றுள்ள தயான் ஜெயதிலகா ஓர் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். “ இது இந்தியாவின் மிக நேர்த்தியான இராசதந்திரம். இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ள உறவின் வலிமைக்கும் இந்தியா தமிழ்நாட்டை எந்த இடத்தில் வைத்துள்ளது என்பதற்கும் அது ஜெனிவா தீர்மானத்தில் – வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது தக்க அளவு கோலாக அமைந்துள்ளது. கொள்கை வகுப்பதில் தமிழ்நாட்டின் உணர்ச்சிகளுக்கு இந்தியா இடம் கொடுக்கவில்லை. ஓரஞ்சாரத்தில் உள்ளவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கட்டளை போட முடியாது என்பதை அது துணிச்சலுடன் உணர்த்தி விட்டது” என்றார் (The Hindu 28.03.2014)

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் தக்க பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணமிது. ஜெனிவாவில் நடந்தது இந்தியா- அமெரிக்கா- பிரிட்டன் இலங்கை ஆகிய நாடுகள் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்திய நாடகம்; தமிழர்களை ஏமாற்றி அவரவர் காய்நகர்த்தலுக்குக் கடைபிடிக்கப்பட்ட இராசதந்திரம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டுக்குச் சென்று பார்த்து விட்டுப், பன்னாட்டுப் புலனாய்வு வரும் என்று உறுமிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் – ஜெனிவா போலித் தீர்மானத்தைப் புகழ்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் சம்பந்தன் இந்தியாவின் கைத்தடி என்பதை இப்போதும் மெய்ப்பித்துள்ளார். “ வாக்களிக்காமல் நடுநிலை வகித்த இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளித்தாலும், அம் முடிவெடுத்திட இந்தியாவுக்குச் சரியான காரணங்கள் இருந்திருக்கும். இந்தியாவோடு நாங்கள் பேசுவோம்” என்கிறார்.

மேலும் “ அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தீர்மானம் சரியாக செயல் படுத்தப் பட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கும், நிரந்தரமான அமைதிக்கும் வழி வகுக்கும்” என்கிறார் சம்பந்தன். சம்பந்தன் என்ற பெயருக்கு முன்னால் கருணா என்று சேர்த்து கருணா சம்பந்தன் என்று வைத்துக் கொண்டால் தமிழக அளவிலும் தமிழீழ அளவிலும் அப்பெயர் பொருத்தமாக இருக்கும்!

காங்கிரசுக்கும் பாசகவுக்கும் இடையே காத்திரமான வேறுபாடு எதுவுமில்லை என்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததை பாசக தலைமை ஆதரிக்கிறது. ஆனால் அதன் தமிழ்நாட்டுத் தலைவர் பொன்.இராதாகிருட்டிணன் தந்திரமாக காங்கிரசு அரசைக் கண்டிக்கிறார். ப.சிதம்பரம் காங்கிரசு அரசின் முடிவை ஏற்காமல் பம்மாத்து செய்வது போல், பொன்.இராதகிருட்டிணனும் தமிழர்களை ஏமாற்றப் போலி எதிர்ப்புக் காட்டுகிறார்.

இத் தீர்மானத்தை ஏற்கச் செய்ய, புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களையும் வளைத்துப் போட, அமெரிக்கா இரண்டு மாதங்களாக எல்லாச் சித்து வேலைகளிலும் ஈடுபட்டது. ஏற்கெனவே அமெரிக்கா – இந்தியா - கருணாநிதி அச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அந்த அச்சில் சுழலும் ஆரக்கால்களாக சில தமிழின உணர்வு அமைப்புகளும், சில உணர்வாளர்களும் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.

முதல்படியாக , அமெரிக்கத் தீர்மானத்தைப் பிடித்துக் கொண்டு மேலேறுவோம் என்று அவர்கள் தர்க்கம் பேசினார்கள். நூலேணியைப் பிடித்துக் கொண்டு மேலேறலாம்; நூலாம்படையைப் பிடித்துக் கொண்டு மேலேற முடியுமா? அறுந்து விழுவோம்! இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்! என்ன கமுக்கமோ, அவர்கள் நூலாம்படை அணியை உருவாக்கினார்கள்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்சார்புள்ள புலனாய்வு மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கத் தீர்மானத்தை எரிப்போம் என்றும் ஒன்றுதிரண்டிருந்த தமிழக இன உணர்வாளர்களை இந்த ஆண்டு இரண்டாகப் பிரித்து விட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்!

போனது போகட்டும்! தமிழகத் தமிழின உணர்வாளர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து , தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்புவோம்.

உலக அரங்கில் மாற்றங்கள் வரும்! நம் கோரிக்கைகள் ஏற்கப்படும்!
==============================================
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 ஏப்ரல் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர்
தோழர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

காவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும். தோழர் பெ.மணியரசன்

நாற்புறமும் பகைவர் சூழ நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம். மேற்புறத்தில் கன்னடர்கள், கீழ்ப்புறக் கடலில் சிங்களர், தென்மேற்கில் மலையாளிகள், வடக்கே தெலுங்கர்@ உச்சந்தலையிலோ தில்லியர்.

இந்த எதிரிகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் தமிழினத்திற்கு இருக்கிறதா ? முகம் கொடுப்பதென்ன, எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலே தமிழினத்திற்கு உண்டு. ஆனால்...

மயக்கத்தில் ஒரு பகுதி, உறக்கத்தில் ஒரு பகுதி, குழப்பத்தில் சிறு பகுதி, கொந்தளிப்பில் மறுபகுதி@ இதுவே இன்றையத் தமிழ் இனத்தின் நிலை.

தமிழர்களுக்குக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் இல்லை. உண்மையைச் சொல்வதெனில், அரசியல் அனாதையாகத் தமிழினம் இன்றுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பொழுது தான் முகிழ்த்து வருகிறது. போதிய வலிவினை இனிமேல் தான் அது பெற வேண்டும்.

தண்ணீரின் அருமையைக் கூட அறிய முடியாத வகையில் தமிழ் மக்களைத் தேர்தல் அரசியல், உறக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. நீர்இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. -திருவள்ளுவர்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே - குடபுலவியனார், புறநானூறு -18

இப்பொழுது பெட்ரோலுக்காக ஈராக்கில் படையெடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள். அமெரிக்காவின் அக்கம் பக்கம் உள்ள நாடல்ல ஈராக். பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல், தொலைவுள்ள ஈராக்கின் மீது படையெடுத்து, தனது நாட்டிற்கு பெட்ரோலியத்தைக் கொள்ளையிட்டுச் செல்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. அதை எடுக்காமல் சேமிப்பில் வைத்துள்ளது அந்நாடு. எதிர்காலத் தேவைக்கு அந்த இருப்பு இன்றியமையாததாம்.

வருங்காலத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் வளத்தைக் கைப்பற்றுவதற்காக நாடுகளுக்கிடையே போர் நடக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். அப்போர் அணுஆயுதப் போராக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இக்கருத்தைத் தமிழ்நாட்டு வெலிங்கடன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 24.02.2007 அன்று பேசியுள்ளார்.(தினமலர் 25.02.2007).

'முதல் உலகப் போர் நாடுகளைப் பிடிப்பதற்கு நடந்தது. இரண்டாவது உலகப் போர் அரசியல் கொள்கைகளுக்காக நடந்தது. அண்மையில் நடந்த ஈராக் போர் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நடந்தது. எதிர்காலத்தில், தண்ணீர், எண்ணெய், இயற்கை வாயு, தங்கம், யுரேனியம், தோரியம் போன்ற வளங்களைக் கைப்பற்றவும் போர் நடக்கும்."

'இந்தப் போரில் அணு ஆயுதங்களின் பயன்பாடே மிக அதிக அளவில் இருக்கும். மேலும், கொள்ளை நோயை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றுவது, மனித உயிரைப் பறிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை" குடியரசுத் தலைவரின் எச்சரிக்கையைப் படிக்கும் போதே, நம் எதிர்காலத் தலை முறையினர் என்ன பாடுபடப் போகின்றார்களோ, என்ன ஆகப் போகிறார்களோ என்ற கவலை மனதைக் கவ்விக் கொள்கிறது.

காலங்காலமாகக் காவிரியில் தமிழர்க்கிருந்து வந்த உரிமையைக் கருவறுக்கும் வகையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்னும், எதுவுமே நடக்காதது போல் நம் தமிழ் மக்கள் இருப்பது நமது கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.

மக்களைக் குற்றம் சொல்வது சரியல்ல. ஊடகங்களும் கட்சித் தலைமைகளும் கட்சி ஏடுகளும் தவறான தகவல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தன@ தந்து கொண்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய 5.02.2007 அன்று காலையிலிருந்தே தில்லி ஆங்கிலத் தொலைக் காட்சிகளான என்.டி.டிவி, சி.என்.என்- ஐ.பி.என் போன்றவை, 'இன்று காவிரித் தீர்ப்பு: எதிர்பாருங்கள்-சிறப்புச் செய்திகள்" என்று அறிவித்துக் கொண்டிருந்தன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சியைத் தவிர மற்றவை இதை கண்டு கொள்ளவே இல்லை. அன்ற பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே மேற்கண்ட ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு, அது தொடர்பான நேர்காணல்களை ஒளிபரப்பின. கர்நாடகாவில் பெங்களுர்-மைசூர் ஆகிய இடங்களிலிருந்து நேர்காணல்களை- மக்கள் பிரதிபலிப்புகளை நேரடியாக ஒளிபரப்பின. தமிழ் நாட்டிலிருந்தும் சில நேர்காணல்களை நேரடி ஒளிபரப்புச் செய்தன.

தமிழகத்திற்கு 419 ஆ.மி.க(ஆயிரம் மில்லியன் கனஅடி - வு.ஆ.ஊ), கர்நாடகத்திற்கு 270 ஆ.மிக, புதுவைக்கு 7 ஆ.மி.க என்று அவை செய்தி வெளியிட்டன. அப்போது தமிழ்த் தொலைக்காட்சிகளான சன், ஜெயா, ராஜ் போன்றவற்றில் திரைப்படம், தொடர்கதைகள், கூத்து கும்மாளம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இது பற்றி செய்தி அலசல் நடத்திய மக்கள் தொலைக்காட்சி தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டியது 419 ஆ.மி.க. என்ற கருத்திலேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தலைவர்களும் அதே கருத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

2.30 மணிக்கெல்லாம், தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டியது 192 ஆ.மி.க. என்றும் அதில் 7 ஆ.மி.க. வை தமிழகம் புதுவைக்குத் தர வேண்டும் என்றும் மேற்படி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. சற்றேறக் குறைய 4 மணிவாக்கில் தான் மக்கள் தொலைக்காட்சி அலசலில் 192 ஆ.மி.க. என்ற விவரம் பேசப்பட்டது. இக்கட்டுரையாளரிடம் தொலைபேசி வழி கருத்துக் கேட்ட போது, 'இது மோசடித் தீர்ப்பு" என்று கூறினார். 'இத்தீர்ப்பை எதிர்த்து நாளையும் நாளை மறுநாளும், சென்னை, சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மதுரை, கோவை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் த.தே.பொ.க மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என்றார். சிறிது நேரம் கழித்து மருத்துவர் இராமதாசின் தொலைபேசி நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் அவர் தெளிவாக 192 ஆ.மி.க என்றும், இது குறைவானது என்றும் கூறினார்.

சன் தொலைக்காட்சியில் 419 ஆ.மி.க தமிழகத்திற்கு என்ற செய்தியைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த போது, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தில்லியில் இருந்தார். அவருடைய கருத்து தொலைக்காட்சிகளில் வந்தது. 'ஞாயத்தீர்ப்பு@ ஆறுதல் அளிக்கிறது" என்றார். அப்போது முதல்வருடன் தில்லியில் இருந்த தமிழகப் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகன், 'மகிழ்ச்சி, மகி;ழ்ச்சி" என்று ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் காலை வந்த தினத்தந்தியில் தலைப்பில் கொட்டை எழுத்தில் 'காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்றும் அதன் கீழே அதை விட சிறிய எழுத்தில் கர்நாடகம் தர வேண்டியது 192 டி.எம்.சி என்றும் செய்தி வெளியி;டப்பட்டது. சி.பி.எம் நாளிதழான தீக்கதிர் 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர்" என்று எட்டுக் கலக் கொட்டைச் செய்தி வெளியிட்டது. அதே போல் சி.பி.ஐ ஏடான ஐனசக்தி 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டது.

தினமணி 'தமிழகத்துக்கு 192 டி.எம்.சி" என்றும், தினமலர் 'தமிழகத்துக்கு 185 டி.எம்.சி" என்றும் செய்தி வெளியிட்டன.

இன்றுவரை தமிழக முதல்வரும் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகனும் காவிரித் தீர்ப்பு ஞாயமானது என்றும், கர்நாடகத்திற்குத் தான் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளனர். 'இத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குப் பாதகமானது@ உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்@ இப்பொழுது கொடுத்ததை நடைமுறைப்படுத்தச் சொல்ல வேண்டும்" என்று, காலதாமதமாக 7.02.2007 அன்று ஒருநாள் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டதோடு அமைதியாகிவிட்டார் ஜெயலலிதா.
'நடுநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்"பென்று சி.பி.ஐ செயலாளர் தா.பாண்டியன் நாக்குத் தெறிக்க ஒலித்தார். சி.பி.எம், இத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. திருமாவளவன் கலைஞர் நிலைபாட்டுடன் முரண்பாடு வந்துவிடாமல், 'இத் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று கூறினார். தமிழகக் காங்கிரசும் இதே பாணியில் தான் பேசியது.

ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்வாறு, மயக்கத்தையும் குழப்பத்தையும் ஊட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்? உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? எனவே தான் மக்களைக் குறை சொல்வதில் பயனில்லை என்கிறோம்.

தீர்ப்பின் சாரம் என்ன ? காவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது.
அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. சார்புத் தன்மை என்பது என்ன? 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.

75 விழுக்காடு சார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.
இந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது. நடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.

1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது. 1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.

சார்புத் தன்மை : 50 மூ
மொத்த நீர் : 740 ஆ.மி.க

1934-1972 வரை மேட்டூர் வந்த சராசரி : 376.8 ஆ.மி.க.
கர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 155.6 ஆ.மி.க.
கேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 3.0 ஆ.மி.க.
----------------------------
540.4 ஆ.மி.க.
தமிழ்நாட்டில் மேட்டூருக்குக்
கீழ் கிடைத்த நீர் : 196.6 ஆ.மி.க.
----------------------------
737.0 ஆ.மி.க.
----------------------------

தமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர் : 573.4 ஆ.மி.க.

தமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்

கர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது@ வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.

உண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.

மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.

அப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)

மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)

ஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று கூறியுள்ளது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா? திருத்திக் கொள்ளக் கூடிய தவறா? இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா? அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.

இதை நியாயத் தீர்ப்பு என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி! ஆறுதல் அளிக்கிறது என்று கூறுகிறார்@ மறு ஆய்;வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.

நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு? 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.

ஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.

நடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.

நடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.

நடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.

இதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.

தமிழ்நாடு 419 ஆ.மி.க.
கர்நாடகம் 270 ஆ.மி.க.
கேரளம் 30 ஆ.மிக.
புதுவை 7 ஆ.மி.க.
-----------------------
மொத்தம் 726 ஆ.மி.க.
-----------------------

கழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது? தமிழகத்திற்காக! தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14 ஸ்ரீ 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு (சுநளநசஎந) செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது? அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.

தமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.

கூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர்நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார். தமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.
தமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது?

இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம் தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்:
1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும்.
2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.
3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.
4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.

பில்லிகுண்டுலு மேட்டூரில எண் அளவு(ஆ.மி.க) அளவு (ஆ.மி.க)
1991-92 340.00 334.96
1992-93 358.61 351.693.
1993-94 230.39 223.374.
1994-95 394.00 373.165.
1995-96 195.51 183.096.
1996-97 245.75 244.057.
1997-98 277.06 268.058.
1998-99 260.40 237.279.
1999-2000 273.68 268.6010.
2000-2001 319.26 306.2011.
2001-2002 189.94 162.7412.
2002-2003 109.45 94.8713.
2003-2004 75.87 65.1614.
2004-2005 185.55 163.9615.
2005-2006 383.91 399.22

பில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம்? ஏனிந்த முரண்பாடு? காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா? இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்? உண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்!

காவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்கும் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே! அது எப்படி கூடுதலான நீர் ஆகும்! அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே? கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.

'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதா?அதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.

இனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது. ஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.

ஒதுக்கீடு - 192 ஆ.மி.க
சுற்றுச்சூழலுக்காக பிடித்தம் - 10 ஆ.மி.க
கடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க
புதுவைக்கு - 7 ஆ.மி.க
கேரளத்திற்கு - 9 ஆ.மி.க
-----------------------------------
30 ஆ.மி.க 162ஆ.மி.க
-----------------------------------
மிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான்.
இதில் தான் 'ஞாயம்" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.

சாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், தமிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். 'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது" - முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.

1968லிருந்து காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா?

1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.

1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.

இதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.

நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது. புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.

1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு. 5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா? கீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½ மடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.

மாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது" என்றும் சமாதானம் சொல்கிறார்.

உண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.

உயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார். பதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.

காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா? கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.

கர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.
தமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது. தமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்தூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.

மிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மறுஆய்வு மனுவெல்லாம் பயன் தராது நடுவர் மன்றம் திட்டமிட்டு, ஏமாற்றிவிட்டதை அதன் தன் முரண்பாட்டை, ஒரு சார்புத் தன்மையை எடுத்து விளக்கி, இவற்றால் 6½ கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர வெண்டும்.
புதிய நடுவர் மன்றம் நியமித்திட ஆணையிட்டு, அது ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கிட கால வரம்பிடக் கோர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயலில் உள்ள( ளுவயவரள பரயசயவெநந) நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி 205 ஆ.மி.க தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தரவும் ஆணையிட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 131 மற்றும் வௌ;வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் துணை கொண்டு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும்.

சனி, 30 நவம்பர், 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு – இட்லரை நினைவுபடுத்தும் செயல்லிதா.
========================================================================
இடிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமன்று, தமிழகத் தமிழர்களின் மானம், மதிப்பு, குடியுரிமை அனைத்தும்தான்!

தகர்க்கப்பட்டது தஞ்சை முள்ளிவாய்க்கால் பூங்கா மட்டுமன்று, தமிழகத்தில் தமிழர்கள் உரிமையோடு வாழ்கிறோம், தமிழீழத் தமிழர்கள் மட்டுமே இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற தவறான புரிதலும் தான்!

தமிழகத் தமிழர்களின் இன்றைய முதற்பெரும் கடமை ஈழவிடுதலைக்குப் போராடுவது தான்; தமிழ்நாட்டுச் சிக்கல்கள், உரிமைகள் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியமும் போலி மனநிறைவும் இப்பொழுது இடிக்கப் பட்டுள்ளன.

கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவைக் கொண்டு முறியடிக்கலாம் என்ற கற்பனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.
 நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவின் தமிழினக் காழ்ப்புணர்ச்சியால் தகர்க்க முடியாது.

தமிழீழத்தில் இனப்படுகொலையில் பலியான தமிழர்களுக்கும் விடுதலைப்போர் வீரர்களுக்கும் இருந்த நினைவுச் சின்னங்களை இராசபட்சே அழித்தான். இந்திய அரசின் தூண்டுதலோடும் தமக்கே உரிய தமிழினக் காழ்ப்புணர்ச்சியோடும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதியை இடித்துத் தகர்த்துள்ளார் செயலலிதா! 
முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் மூடிமுத்திரை (சீல்) வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தை நாடினார் செயலலிதா! அங்கு அவர்க்கு உடனடிப்பலன் கிடைக்கவில்லை.

எனவே, 13.11.2013 அன்று விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காவல்துறையினரை ஏவி, முள்ளிவாய்க் கால் சுற்றுச்சுவர்களையும், 25 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இருந்த பூங்காவையும், அழகாகக் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றையும், மின் விளக்குக் கோபுரத்தையும் மிகப்பெரிய பெயர்ப்பலகையையும் இடித்துத் தகர்த்து, நாசப்படுத்திவிட்டது செயலலிதா அரசு.

இந்த அழிவு வேலைக்கு அரசு அதிகாரிகள் சொன்ன காரணம், மேற்கண்ட கட்டு மானங்கள் அனைத்தும் தமிழக அரசின் நெடுஞ்சாலைப் புறம்போக்கில் உள்ளது; அதனால் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்பதாகும்.

சாலையோர புறம்போக்கு நிலத்தை பூங்கா வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்து வதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் விதிமுறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ளது. அதன்படி திரு பழ.நெடுமாறன் அவர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அனுமதி பின்னர் இரத்து செய்யப்பட்டதாக இப்பொழுது அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால் மூன்றாண்டுகளாக அந்தவட்டாரத்தில் உளியின் ஓசை கேட்டுக் கொண்டுள்ளது, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளன. பூங்கா அமைத்து வளர்க்கிறார்கள். சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள். இவையனைத்தும் கமுக்கமாக - நள்ளிரவில் நடந்த வேலைகள் அல்ல.

அந்த 25 ஆயிரம் சதுர அடியில் நடந்த இந்த வேலைகளை நேரடியாக வந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்திருக்கலாம். வெளியேறும் படி அறிவித்திருக்கலாம். அந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலைக் கேட்கவில்லை என்றால் காவல்துறையின் உதவியை நாடியிருக்கலாம். இந்த நடைமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளது செயலலிதா அரசு.

திறப்பு விழாவிற்கான அனுமதிகோரி அக்டோபர் மாதம் 19ஆம் நாள் தஞ்சை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, அனுமதி கோரி தஞ்சை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் கொடுக்கப் பட்டது.

ஆனால், தஞ்சை மாவட்டக் காவல்துறை - முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கவுமில்லை; அனுமதி மறுப்புக் கடிதம் வழங்கவுமில்லை. நீதிமன்ற நிவாரணம் தேட வழியில்லாதபடி, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துக் கழுத்தறுக்கக் காவல்துறை காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர் உ.த.பே. நிர்வாகிகள். அதனால், 
அனுமதி வழங்கும் ஆணை கோரி 04.11.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வழக்குத் தொடுத்தார். 05.11.2013 அன்று அரசு வழக்குரைஞர் எதிர்ப்பைப் புறந்தள்ளி, 
திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கி உரிய பாதுகாப்பு தருமாறு காவல்துறைக்கு நீதிபதி திரு. ராஜா கட்டளையிட்டார்.

அத்தீர்ப்பை எதிர்த்து, 05.11.2013 அன்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுப் போட்டது. அன்று மாலையே, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விழா நடத்தத் தடை ஆணை தர முடியாது என்று மறுத்து, விழாவிற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பளிக்குமாறு காவல்துறைக்கு ஆணையிட்டது.

உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லது வேறு வழிகளில் திறப்பு விழாவிற்குத் தமிழக அரசு தடை போடலாம் என்று ஊகித்தறிந்த உ.த.பே. நிர்வாகிகள், 06.11.2013 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை திரு. ம.நடராசன் தலைமையில், திரு.பழ.நெடுமாறன் அவர்கள் முறைப்படி திறந்து வைத்தனர்.

முற்றம் திறக்கப்பட்டபின் ஏற்கெனவே திட்டமிட்டபடி மூன்று நாள் விழா 08.11.2013 அன்று தொடங்கி, 10.11.2013 அன்று வரை எழுச்சியுடன் நடந்து நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து கலந்து கொண்டனர்.

 ஆட்சியாளர்களோ அல்லது பெரிய அரசியல் கட்சியினரோ இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தமிழகம் - தனது இலட்சிய அரசியல் நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது என்பதை அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியது. தமிழ் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் கணிசமாக வந்திருந்தனர்.

இவ்வாறு தமிழர்களின் உவகையும் உணர்வும் கலந்த எழுச்சியோடு மூன்று நாள் விழா நடந்து முடிந்த மூன்றாம் நாள் விடியற்காலை, ஆட்சியாளர்கள் பொக்லைன் கொண்டு முற்றத்தின் ஒரு பகுதியை இடித்தனர்.

‘ஆக்கிரமிப்பை’ அகற்றுகிறோம் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறியது போலிக் காரணம். இரண்டு ஆண்டுகளாக ஏன் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவில்லை? எந்த உடனடிப் பயன்பாட்டுக்காக ‘அந்த ஆக்கிரமிப்புப்‘ பூங்கா அகற்றப்பட்டது? அந்த உடனடித் தேவை குறித்து அதிகாரிகள் கூறாதது ஏன்? செயலலிதாவை ஆக்கிரமித்துள்ள தமிழின வெறுப்புதான் உண்மையான காரணம்!
ம.நடராசன் பங்களிப்போடு எழுப்பப்பட்டதாலும், அதில் அவர்க்கு முகாமைப்பாத்திரம் இருப்பதாலும் முதலமைச்சர் எரிச்சலுற்று முற்றத்தை இடிக்கத் துணிந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.

செல்வி செயலலிதாவுக்கும் திரு. ம.நடராசனுக்கும் இடையே உறவு இருக்கிறதா, பகை இருக்கிறதா என்பது யாரும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்! அது ஒருபக்கம் இருக்க, நாம் இன்னொரு வினாவை எழுப்புகிறோம்.
 
ம.நடராசன் குடியுரிமை பறிக்கப் பட்டவரா? அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் அவருக்குக் கிடையாதா? ஒரு குடிமகனின் குடிஉரிமையைப் பறிக்கும் அதிகாரம் ஒரு மாநில முதலமைச்சர்க்கு இருக்கிறதா?
நடராசன் முன்னின்று செய்கிறார் என்பதற்காக, சட்டப்படியான ஒரு செயலைத் தடுத்துவிடும் அதிகாரம் செயலலிதாவுக்கு இருக்கிறதா? இவ்வினாக்கள் அனைத்திற்கும் “இல்லை, இல்லை” என்பது மட்டுமே விடை!
இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்புவதை செயலலிதா எதிர்க்கிறார் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்திய அரசு நெருக்குதல் செய்ததால்தான், முற்றத்தின் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்தார்; திறந்தபின் அதை இடிக்க முனைந்தார் என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள்.

இந்திய அரசு தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்திருந்தால், அதை எழுத்து வடிவில் தருமாறு முதலமைச்சர் கோரியிருக்க வேண்டும். இந்திய அரசின் நெருக்குதலை தமிழக மக்களிடம் தெரிவித்திருக்க வேண்டும்; அவ்வாறு தெரிவிப்பதில் அவர்க்கென்ன தடை? அது ஒன்றும் இராணுவக் கமுக்கம் இல்லையே! ஒரு கொள்கை முடிவுதானே! “இச்சிக்கலில் இந்திய அரசின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அறிவித்திருக்கலாமே!

இந்திய அரசின் நெருக்குதலால் தான் முதலமைச்சர் செயலலிதா முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிராகச் செயல்பட்டார் எனில் அவர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்போடு தமது எதிர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டிருக்கலாம். பொறுப்பை நீதித்துறையின் மீது போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கலாம்.

அவ்வாறு ஒதுங்கிக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தை அணுகி நிரந்தரத் தடை கோருகிறார்; திறந்த முற்றத்தை மூடி முத்திரை வைக்க உச்சநீதி மன்றத்தின் அனுமதி கோருகிறார்; இம்முயற்சிகளில் தோற்றபின், முரட்டுத்தனமாக இடிக்கச் செய்கிறார்.

இவ்வாறு இடிப்பது சட்டவிரோதச் செயல் மட்டுமன்று, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமும் ஆகும். அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டிய முதலமைச்சர் தமது விருப்பு வெறுப்புப்படி ஆட்சி நடத்துகிறார்.

“விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, காய்தல் உவத்தல் அகற்றி சட்டப்படி ஆட்சி நடத்துவேன்” என்று கடவுள் பெயரால் பதவி உறுதிமொழி ஏற்றுவிட்டு அதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறார் செயலலிதா. இவருடைய வெறுப்பிற்கு அதிகமாகப் பலியாவது தமிழர் அடையாளச் சின்னங்கள் - தமிழ்மொழி, தமிழ் இனம் ஆகியவையே!

2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மு
தல்வர் பதவி ஏற்றபின் கடற்கரையில் நின்ற கண்ணகி சிலையை இரவோடு இரவாக பெயர்த்து அப்புறப்படுத்தினார் செயலலிதா. (பின்னர் வந்த தி.மு.க. ஆட்சியில் அச்சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது).

உலகின் சிறப்புமிக்க நூலகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட ஆணையிட்டார். 

உயர்நீதிமன்றத் தடையால்தான் இன்றும் அந்நூலகம் உயிர் வாழ்கிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூலகத்தைக் காலி செய்தார். அந் நூல்களுக்கு மாற்று நூலகம் உருவாக்கப்பட வில்லை.
மக்கள் வரிப்பணத்தில் 840 கோடி ரூபாய் செலவு செய்து சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட புத்தம் புதிய தலைமைச் செய லகம், சட்டப்பேரவை ஆகியவற்றிற்கான கட்டடங்களை, அப்படியே கைவிட்டு, பாழடைந்த மண்டபங்களாக்கி விட்டார் செயலலிதா.

கருணாநிதி கட்டியவற்றை அனுமதிக்கமாட்டேன் என்று தடை போட என்ன ஞாயம் இருக்கிறது? செயலலிதாவுக்கு அவர் குடும்பத்தார் கொடுத்த சீதனமா தமிழக அரசு? இல்லை! தமிழக மக்கள் ஒப்படைத்த பொறுப்பு!

கருணாநிதி மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டுமன்று, தமிழினத்தின் மீது, தமிழர் வரலாற்றுப் பெருமிதங்கள் மீது, தமிழ்மொழி மீது அவர்க்கு இருந்து வரும் காழ்ப்புணர்ச்சிகளே அவரது மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்!

தமிழன்னைக்கு நூறுகோடி ரூபாய்ச் செலவில் மதுரையில் சிலை எழுப்புகிறேன் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில், அதே சட்டப்பேரவையில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை, தமிழ்ப் பயிற்று மொழியாக இல்லாத - ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புப் பிரிவுகள் தமிழகமெங்கும் தொடங்கப் படும் என்று அவரின் கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதற்கு முதல் நாள் (12.11.2013) மாலை சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தி, நடுவண் அரசுக்கு எதிராகக் காரசாரமான வசனம் பேசி, “இந்திய அரசு சார்பில் யாரும் இலங்கையில் நடை பெறும் பொது நல மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றினார். அந்த இரவு முழுவதுமாக விடிவதற்குள் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்தார்.
 மறுநாள் முற்றம் இடிக்கப்படும்போது, அது தமிழின விரோதச் செயல் என்று தமிழ்மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கான தந்திரமே முதல் நாள் மாலை நிகழ்ந்த சட்டப் பேரவை சவுடால்கள். இதற்குப் பெயர்தான் இட்லர் உத்தி!
1933 ஆம் ஆண்டு மே முதல் நாள் மேநாள் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தினார் இட்லர். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். இன்றிலிருந்து செர்மனியின் முழக்கம் “உழைப்பை மதிப்போம்; உழைப்பாளியைப் போற்றுவோம்” என்பதுதான் என்று ஆவேசமாகப் பேசினார். விடிந்தவுடன் வந்த நாளேடுகளில் “தொழிற்சங்கங்களுக் குத் தடை; தொழிற்சங்கத் தலைவர்கள் கைது” என்ற செய்தி இருந்தது.

தமிழர்கள் உலக வரலாற்றிலிருந்தும் தமிழக நடப்புகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டி ஓட்டை யாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் போதும்” என்ற பழமொழியைப் புறந்தள்ள வேண்டும். சட்டி ஓட்டை யில்லாமல் இருந்தால்தான் கொழுக்கட்டை வேகும்; ஓட்டையாய் இருந்தால் கொழுக்கட்டை அரை வேக்காடு ஆகி விடும்; அரை வேக்காடு எதற்கும் பயன்படாது.

செல்வி செயலலிதா 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறையாக முதல்வர் பதவிக்கு வந்த போது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2011 மே 16-31 இதழில் “தமிழகத் தேர்தல்: ஏமாற்றியவர் ஏமாந்தார்” என்ற கட்டுரையில் பின் வருமாறு எழுதினோம்; அதையே மீண்டும் கூறுகிறோம்.
“. உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற்கெதிரான காழ்ப் புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, 

எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், அடக்குமுறை, தொழிற்சங்கஉரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வருமென்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது. தி.மு.க.வையும், அ.இ.அ.தி.மு.கவையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டிக் கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவைக் கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வளவே!”
------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்
www.kannotam.com
-----------------------------------------------------------------------------------------
 —